கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்; பரபரப்பு - என்ன காரணம்?

Australia
By Sumathi Apr 26, 2024 06:50 AM GMT
Report

160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

பைலட் திமிங்கலங்கள்

உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது திமிங்கலம் தான். நீரில் வாழும் திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

whales

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் அரிய வகை திமிங்கலமான பைலட் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக வாழுகின்றன. இவை ஆழ்கடலிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன.

ஆண் பைலட் திமிங்கலங்கள் 45 வருடம் வரை உயிர் வாழும். பெண் பைலட் திமிங்கலங்கள் 60 வருடம் வரை உயிர் வாழும். இவை அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இந்த திமிங்கலங்கள் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி கரை ஒதுங்குகின்றன.

உலகின் தனிமையான திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ..

உலகின் தனிமையான திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ..

ஆர்வலர்கள் கவலை 

அந்த வகையில், டன்ஸ்பாராக்கில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. உடனே, சம்பவ இடம் விரைந்த வனவிலங்குநல ஆர்வலர்கள், கடல்சார் உயிரியலாளர்கள் கரை ஒதுங்கிய 160 பைலட் திமிங்கலங்களில் பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.

australia

பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு மூலம் ஆழ்கடலுக்கு இழுத்து சென்று விட்டனர். ஆனால் 26-க்கும் மேற்பட்ட உயிரிழந்த திமிங்கலங்களை அங்குள்ள மணல்பரப்பில் குழி தோண்டி புதைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.