60 அடி உயர ராட்சத ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய சிறுமி - நடுங்க வைக்கும் வீடியோ காட்சி!

Viral Video Uttar Pradesh India
By Swetha Dec 06, 2024 06:30 AM GMT
Report

ராட்சத ராட்டினம் ஒன்றில் 60 அடி உயரத்தில் சிறுமி தொங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராட்சத ராட்டினம்.. 

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரியின் நிகாசன் பகுதியில் உள்ள ராகேத்தி கிராமத்தில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அங்கு கடந்த புதன்கிழமை 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி சக்கரம் நகர தொடங்கியதும்,

 60 அடி உயர ராட்சத ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய சிறுமி - நடுங்க வைக்கும் வீடியோ காட்சி! | 13 Yr Old Hangs From 60 Foot High Ferris Wheel

அவள் சமநிலையை இழந்து ராட்டினத்தின் இரும்பு கம்பியில் தொங்கியபடி கத்தில் கூச்சலிட தொடங்கினாள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அக்குழந்தை கத்தி கூச்சலிடுவதை கேட்டு ஆபரேட்டர்கள் ராட்டினத்தை உடனே நிறுத்தினர்.

சுழலும் ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் முடி - தோலோடு பெயர்ந்து வந்த அவலம்!

சுழலும் ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் முடி - தோலோடு பெயர்ந்து வந்த அவலம்!

 வீடியோ காட்சி

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை அச்சிறுமி 60 அடி அந்தரத்தில் தொங்கியப்படி இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இந்த நிலையில், அடையாளம் காணப்படாத சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

60 அடி உயர ராட்சத ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய சிறுமி - நடுங்க வைக்கும் வீடியோ காட்சி! | 13 Yr Old Hangs From 60 Foot High Ferris Wheel

மேலும் ராட்சத ராட்டினத்தை இயக்க அனுமதி இல்லாத போது எப்படி இயக்கப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கண்காட்சியில் இயங்கிய 60 அடி உயர ராட்சத ராட்டினத்தில் அச்சிறுமி தொங்கியது பார்போரை பதற்றத்திலும், பயத்திலும் ஆழ்த்தியது.