13வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாத்தா, 3 சித்தப்பா, அண்ணன் கொடூரம்!
13 வயது சிறுமியை குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னையைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை அவரது பெற்றோர்கள் விட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளனர். அதனால் சிறுமி தாத்தாவின் வளர்ப்பில் அவருடம் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி தாத்தாவின் குடும்பத்தினர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி அழுதுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் தகவல் தெரிவித்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாத்தா, மூன்று சித்தப்பாக்கள், 2 அண்ணன்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் 6 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிறுமியின் தாத்தா மூன்று சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனையும் சகோதரர்களில்
ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் மற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.