மனநலம் பாதித்த 13 வயது மகள் - பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை!

Sexual harassment Kerala Child Abuse Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

13 வயது மகளுக்கு தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

கேரளா, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது நபர். இவர் தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அவரின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

மனநலம் பாதித்த 13 வயது மகள் - பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை! | 13 Year Old Daughter Harassment By Father

இதனால் மனநலம் பாதித்த தனது மகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளுக்கு அவர் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்தச் சிறுமி அக்கம்பக்கத்தினரிடமும், பள்ளியில் ஆசிரியரிடமும் கூறி அழுதுள்ளார்.

107 ஆண்டுகள் சிறை

அதனைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் மீதி வழக்குப்பதிவு செய்து, 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.