கடலில் போதையில் அலைமோதும் சுறாக்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Brazil Drugs
By Sumathi Jul 24, 2024 11:34 AM GMT
Report

கடலில் சுறாக்கள் போதையில் உலா வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போதையில் சுறாக்கள்

பிரேசில் கடற்கரையில் உலாவும் சுறாக்களில் இருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், மாதிரி எடுத்த அனைத்து சுறாக்களிலும் கோக்கைன் போதைப்பொருளின் கலப்பு இருந்தது தெரியவந்தது.

shark

அந்த சுறா மீன்களின் தசை மற்றும் கல்லீரல் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், அவற்றில் கோக்கைன் போதைப்பொருளின் தாக்கம் இருந்துள்ளது.

தாய்பால் அதிகரிக்கச் செய்யும் பால்சுறா புட்டு! சுவையாக செய்வது எப்படி?

தாய்பால் அதிகரிக்கச் செய்யும் பால்சுறா புட்டு! சுவையாக செய்வது எப்படி?

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கடல்வாழ் உயிரினங்களில் பதிவாகியுள்ள போதைப்பொருள் செறிவை விட இது 100 மடங்கு அதிகம். இது சுறாக்கள் மட்டுமின்றி பிற கடல் வாழ் உயிரினங்கள் உடலிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடலில் போதையில் அலைமோதும் சுறாக்கள் - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! | 13 Sharks Test Positive For Cocaine Brazil

இதற்கு காரணம் சட்டவிரோத கோக்கைன் தொழிற்சாலைகளில் இருந்து திருட்டுத் தனமாக கடலில் கலக்கப்படும் கழிவுகள் மற்றும்,

கடத்தல்காரர்கள் ரோந்து அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கடலில் வீசப்படும் கோக்கைன் மூட்டைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆபத்து கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.