வெளியான +2 தேர்வு முடிவுகள் - மனமுடைந்தது மாணவி எடுத்த விபரீத முடிவு!
மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்னி (17). 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் தேர்ச்சி பெற்றார். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் கிஷோர்னி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும் சோகம்
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சத்யா (17) என்பவரும் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார். அந்த மாணவி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.