12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பிட் அடித்து ஆதாரத்தை இன்ஸ்டா ஸ்டோரி போட்ட அரசுப்பள்ளி மாணவர்!

Tamil nadu Vellore
By Jiyath Apr 07, 2024 02:52 AM GMT
Report

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் "பிட்" அடித்ததாக, மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெற்றன. இதில் கடந்த மார்ச் 11 மற்றும் 15-ம் தேதிகளில் கணக்குப்பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பிட் அடித்து ஆதாரத்தை இன்ஸ்டா ஸ்டோரி போட்ட அரசுப்பள்ளி மாணவர்! | 12Th School Student Posts Shocking Insta Story

இந்நிலையில் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர், இந்த தேர்வுக்கு தான் "பிட்" எடுத்துச் சென்றதாக கூறி, அதனை பள்ளி வளாகத்திலேயே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார். அந்த போட்டோக்களுக்கு பின்னணியாக தனுஷ் நடித்த வி.ஐ.பி படத்தின் ‘வாட் எ கருவாடு’ பாடல்,

ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இன்ஸ்டா ஸ்டோரி

பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற ‘படிச்சு பார்த்தேன் ஏறவில்லை’ போன்ற பாடல்களை வைத்துள்ளார். மேலும், அம்மாணவர் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த இன்ஸ்டா ஸ்டோரிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - பிட் அடித்து ஆதாரத்தை இன்ஸ்டா ஸ்டோரி போட்ட அரசுப்பள்ளி மாணவர்! | 12Th School Student Posts Shocking Insta Story

இதனைப் பார்த்த கல்வியாளர்கள், தேர்வுக்கு மாணவர்கள் பிட் எடுத்துச் செல்லும் இந்த போக்கு, அவர்களின் கல்வித் தரத்தையும், ஒழுக்கத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருகிறோம் என்று வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.