பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் - சீரழிந்த வாழ்க்கை
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கர்ப்பம்
மயிலாடுதுறை, அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் காதலாக மாறி, கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மாணவன் கைது
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையறிந்த போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியுடன் படித்து வரும் சக மாணவன் தான் காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணவனை கைது செய்தனர். பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.