12,900 குழந்தைகளுக்கு தாயான 15-19 வயது சிறுமிகள் - அதிர்ச்சி புள்ளி விவரம்
பதின்ம வயதில் குழந்தைப் பெறுவது அதிகமாகி வருவதாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
டீன் ஏஜ் தாய்மை
2022 ம் ஆண்டில் அரசாங்கத்தால் வெளியிட்டுள்ள தரவுகளின் படி , கேரளா மாநிலத்தில் 15-19 வயதிற்குட்பட்ட இளம்பெண்களுக்கு 12,939 புதிதாக குழந்தைகள் பிறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரசவத்தில் 12,606 குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தில் 215 குழந்தைகளும், மூன்றாவது பிரசவத்தில் 67 குழந்தைகளும், நான்காவது பிரசவத்தில் 27 குழந்தைகளும், ஐந்தாவது பிரசவத்தில் 5குழந்தைகளும் , ஆறாவது பிரசவத்தில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளதாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் ஏழு பேர் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ஆவார்கள்.
2021 தரவு
ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் கருத்துப்படி, 18 வயதுக்கு முன் குழந்தை பெற்றுகொள்வது, அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடம்புரளச் செய்து, கல்வி, வாழ்வாதாரம், ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2022 ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் படி குழந்தை பிறப்பு சற்றே குறைந்துள்ளது.
2021 ம் ஆண்டில், 15-19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 15,501 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் ஐந்து பேர் 15 வயதுக்குள்பட்ட இளம் தாய்மார்கள் ஆவர்.
மத வாரியான அடிப்படையிலும் தரவுகளையும் வழங்கியுள்ளது அரசாங்கம். மொத்தமாக உள்ள 12,939 குழந்தைகளில், 4,465 இந்து குடும்பங்களிலும், 7,412 முஸ்லிம் குடும்பங்களிலும், 417 கிறிஸ்தவ குடும்பங்களிலும், 641 குழந்தைகள் பிற மதங்களிலும் பிறந்துள்ளன. 4 குழந்தைகள் மதம் குறிப்பிடப்படவில்லை.