30,000 சிறுமிகள் கர்ப்பம் - கொரோனா காலத்தில் இப்படி ஒரு கொடுமையா? அதிரவைக்கும் தகவல்!

COVID-19 Tamil nadu Sexual harassment
By Swetha May 10, 2024 11:15 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

சிறுமிகள் கர்ப்பம் 

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கொரோன பரவல் அதிகரித்து வந்தது. இதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டது, இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையிலும் பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் சில இடங்களில் ரகசியமாகவும் நடைபெற்றன.

30,000 சிறுமிகள் கர்ப்பம் - கொரோனா காலத்தில் இப்படி ஒரு கொடுமையா? அதிரவைக்கும் தகவல்! | 30000 Girls Pregnant During Corona Period

அந்த நேரத்தில் சில கிராமங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதே சமயத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவை அனைத்துக்கும் சான்றாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

இது ரொம்ப லேட்..! கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற நிறுவனம் !!

இது ரொம்ப லேட்..! கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற நிறுவனம் !!

அதிரவைக்கும் தகவல்

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, 2020 முதல் 2022 வரையிலான இந்த 3 ஆண்டு காலங்களில் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது.

30,000 சிறுமிகள் கர்ப்பம் - கொரோனா காலத்தில் இப்படி ஒரு கொடுமையா? அதிரவைக்கும் தகவல்! | 30000 Girls Pregnant During Corona Period

30,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைந்தற்கு காதல் விவகாரங்கள் தான் அதிகபட்ச காரணமாக இருக்கிறது. அதோடு, இளம் வயது திருமணம், இளம் வயதில் ஈர்ப்பு காரணமாக உடலுறவு, அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களும் இதில் அடங்கும்.

குழந்தைத் திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை ஆகியவற்றின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால், முப்பதாயிரம் சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் வெறும் 13,000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளது.