125 பேரின் கால்களைக் கழுவிய எம்.எல்.ஏ - என்ன காரணம் தெரியுமா?
41 பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இந்து மதம்
சத்தீஸ்கர், பண்டாரியா சட்டமன்றத் தொகுதியில், பழங்குடியினர் கலாச்சாரம் தொடர்பாக நியூர் கிராமத்தில் 'கர் வாபசி' (வீடு திரும்புதல்) என்ற சடங்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் பாவனா போஹ்ரா, மீண்டும் இந்து மதத்தைத் தழுவிய 125 பேரின் பாதங்களையும் கழுவி,வரவேற்றார். நியூர், அமனியா, கட்வானி, தம்கர் மற்றும் பிர்ஹுல்திஹ் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய பாவனா போஹ்ரா, "சுமார் 41 குடும்பங்களைச் சேர்ந்த 125 உறுப்பினர்கள் இந்துமதத்துக்குத் திரும்பியுள்ளனர். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறும். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கூட, 75 முதல் 80 பேர் இவ்வாறு இந்து மதத்துக்குத் திரும்பினர்.
எம்எல்ஏ வரவேற்பு
இப்போது, நாங்கள் வனப் பகுதிகளில் இருக்கிறோம். மக்கள் தாங்களாகவே முன்வந்து எங்களைத் தொடர்புகொண்டு மீண்டும் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்புகிறார்கள். தங்கள் கலாச்சாரத்திற்குத் திரும்பவில்லை என்றால்,

பழங்குடியினரின் வளமான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாமல் போகும் என்பதைப் அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் அடையாளம் என்பது காடு மற்றும் நிலத்துடன் பிணைக்கப்பட்டது.
இவர்களின் அடையாளம் பஞ்சபூதங்களுடன் உள்ள பிணைப்புதான். இதிலிருந்தும் யாராலும் விலகி இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.