ஒரே பள்ளியில் 120 இரட்டையர்கள் - அடையாளம் தெரியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்
இரட்டையர்கள் பள்ளி
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றாலே ஒரே உருவ தோற்றத்தில் இருப்பார்கள். அடையாளம் காண குழப்பம் ஏற்படும்.
இந்த நிலையில் ஒரு பள்ளியில் 60 இரட்டையர்கள் படிக்கிறார்கள். அதாவது 120 மாணவர்கள். இந்தப் பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் 'இரட்டையர்கள் பள்ளி' என்று பெயர் உண்டு.
அதிகரித்த இரட்டையர்கள்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ளது போலீஸ் டிஏவி பப்ளிக் பள்ளிதான் அந்த அதிசய பள்ளி ஆகும். கடந்த 2 ஆண்டுகள் முன் 47 ஆக இருந்த இரட்டையர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது.
எங்கள் பள்ளியில் இவ்வளவு இரட்டையர்கள் படிக்கிறார்கள் என்பது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது.பலரும் இரட்டையர்களுக்கு ஏதேனும் சலுகை அளிக்கிறீர்களா என கேட்கிறார்கள் அப்படி எதுவும் இல்லை அனைவர்க்கும் பொதுவான கட்டணம்தான் என அந்த பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் தெரிவித்துள்ளார்.
குழம்பும் ஆசிரியர்கள்
ஒரே உருவத் தோற்றத்தில் உள்ளதால் யார் தவறு செய்தார்கள் என கண்டுபிடிப்பது பெரிய சவாலாக உள்ளதாக அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். உடன் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குழப்பத்தை தவிர்க்கவே பெரும்பாலும் இரட்டையர்களை ஒரே வகுப்பில் அனுமதிக்காமல் வேறு வேறு பிரிவில் போட்டு விடுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகரித்த