இரட்டையர்களை காதலித்த பெண்; நிர்வாண வீடியோ கால் - இறுதியில் நடந்த டிவிஸ்ட்
இரட்டையர்களை காதலித்த இளம்பெண்ணை வீடியோவை வைத்து மிரட்டியுள்ளனர்.
இரட்டையர்கள்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சந்தக்குன்னு பகுதியை சேர்ந்தவர்கள் அசைனார் (21), உசேன் (21). இரட்டையர்களான இவர்கள் இருவரும் இணைந்து பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவருக்கு அசைனார் காதல் வலையை வீசியுள்ளார். முதலில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் பின்னர் அசைனாரை காதலிக்க தொடங்கியுள்ளார்.
வீடியோ கால்
இதை அறிந்த உசேனும் அந்த பெண்ணுக்கு காதல் வலையை வீசியுள்ளார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல் உள்ளதால் அசைனார் என நினைத்து உசேனையும் காதலிக்க தொடங்கியுள்ளார்.
இரட்டையர்கள் தினமும் இரவில் இளம்பெண்ணுடன் வீடியோ கால் பேசியுள்ளனர். ஒருநாள் அசைனார் வீடியோ கால் பேசும் போது, நாம் தான் திருமணம் செய்யப்போகிறோமே, வீடியோ காலில் ஆடை இல்லாமல் வருமாறு கேட்டுள்ளார். இளம்பெண்ணும் வீடியோ காலில் ஆடை இல்லாமல் தோன்றியுள்ளார்.
இளம்பெண்ணுக்கு தெரியாமல் அந்த வீடியோவை அசைனார் ரெக்கார்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை அசைனார் உசேனிடம் காண்பிக்க இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை அனுபவிக்க திட்டமிடுகின்றனர்.
கைது
மேலும் அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை தங்கள் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகின்றனர். அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து எடக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசைனார் மற்றும் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
