திடீரென சரிந்து விழுந்த 6ம் வகுப்பு மாணவர்.. மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
சிறுவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் சரிந்து விழுந்த சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
குஜராத் மாநிலம், துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துஷ்யந்த். இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
பேச்சு மூச்சின்றி கிடந்த அந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சியில் மக்கள்
இந்நிலையில், சமீப காலமாக இளம் வயதிலேயே பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் கோவிட் தடுப்பூசிகள் என்று எழுந்துள்ள நிலையில், இந்த சிறுவனின் தந்தையிடம் கேட்டபொழுது அவருக்கு தடுப்பூசி போடவில்லை என்று கூறியுள்ளார்.
இது அந்த கிராம மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. மேலும், சிறுவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.