12வயது சிறுமி கர்ப்பம்: பெற்ற தந்தையே வெறிச்செயல் - தொடர்ந்து கொடூரம்!

Tamil nadu Sexual harassment Child Abuse Crime
By Sumathi Nov 04, 2022 08:28 AM GMT
Report

தந்தையே, மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

திண்டுக்கல், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

12வயது சிறுமி கர்ப்பம்: பெற்ற தந்தையே வெறிச்செயல் - தொடர்ந்து கொடூரம்! | 12 Year Old Girl Pregnancy Because Of Father

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்கு புகார் தெரிவித்தனர். அடஹ்ன் அடிப்படையில், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இருவரும் பிரிந்துள்ளனார்.

சிறுமி கர்ப்பம்

இதனால் இந்தச் சிறுமி தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரது நண்பன் கண்ணன் என்பவரும் சிறுமியை தொல்லை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் முகமது ரபிக் என்பவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீஸார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும், மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி.பாஸ்கரன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.