12 வயது சிறுவனுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்!

Attempted Murder Delhi Sexual harassment Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

12 வயது சிறுவனை நான்கு பேர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

டெல்லியில் 12 வயது சிறுவன், நான்கு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவனுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்! | 12 Year Boy Raped By 4 Persons In Delhi

மேலும், வன்கொடுமை செய்த நான்கு பேரும் சிறுவனை குச்சியை வைத்து கொடூரமாக தாக்கி சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பதிவில்,

கொடூர தாக்குதல்

"டெல்லியில் சிறுவனுக்கு கூட பாதுகாப்பு இல்லை" என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தை பெண்கள் ஆணையம் கையில் எடுத்துள்ளதாகவும், டெல்லி காவல் துறையுடன் இணைந்து வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், "பெண்களை விடுங்கள். டெல்லியில் சிறுவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. 12 வயது சிறுவனை நான்கு பேர் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, குச்சியால் பலமாக தாக்கி கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

 மகளிர் ஆணையம் சம்மன்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார். இதுதொடர்பாக, ஒருவரை காவல் துறையினரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத டெல்லி காவல் துறையினருக்கு, டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.