13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் - பகீர் சம்பவம்!
13 வயது சிறுமியை 12 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பீகாரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கோவை, கோவில்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகில் அதே மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அங்கு சென்ற அந்த சிறுவன் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
மேலும், இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து, சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்ததில், 2 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என கண்டறிந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுவனை போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.