நொடியில் நடந்த கோர விபத்து..அடுத்தடுத்து மோதி கொண்ட 12 வாகனங்கள் - 5 பேர் உயிரிழப்பு!
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கோர விபத்து..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரு மாநிலங்களை இணைக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் எப்பொழுதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் நேற்று வழக்கம் போல் இந்த சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அதே சமயத்தில், பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே புதிதாக மேம்பாலம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வாகனங்களை வேகத்தை குறைக்கும் விதமாக அங்கு தற்காலிக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேகத்தடையை கடப்பதற்காக சட்டென்று வேகத்தை குறைத்துள்ளது.
12 வாகனங்கள்
அதனை சற்றும் எதிர்பாராமல் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக லாரியின் மீது மோதி பெரும் விபத்தில் சிக்கின. அதன்படி 8 கார்கள், 2 லாரிகள், 1 அரசுப் பேருந்து உள்பட 12 வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தது.
[OA7CF5[
இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்தி அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தின் காரணமாக சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.