பஹல்காம் விசிட்; ஊடுருவிய 8 உளவாளிகளை தூக்கிய போலீஸ் - அதிர்ச்சி திருப்பங்கள்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் விசிட்
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 6 பேர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும், 4 பேர் ஹரியானாவில் இருந்தும், ஒருவர் உத்தரபிரதேசத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட பெரும்பாலானோர், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் நெருக்கமாக பழகி பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர்.
ரூ.60,000 லஞ்சம்
லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதி வரை ஜோதி சென்றிருக்கிறார். அவர் சீன உளவு அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த உளவுத் துறை அதிகாரிகள் ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் பஞ்சாப்பை சேர்ந்த குசாலா என்ற பெண் இந்திய ராணுவத்தின் நடமாட்டம் பற்றி தகவல்களை பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டு,
யுபிஐ மூலம் இரண்டு தவணைகளாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். தொடர்ந்து இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.