கலை நிகழ்ச்சியில் ராமாயண நாடகம்..அரங்கேற்றிய மாணவர்களுக்கு ரூ1.2 லட்சம் அபராதம்!

Viral Video India Mumbai
By Swetha Jun 20, 2024 09:00 AM GMT
Report

ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராமாயண நாடகம்

மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியில் சிலர் கடந்த மார்ச் மாதம் கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் 'ராவோஹன்' என்ற பெயரில் ராமாயாண நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கலை நிகழ்ச்சியில் ராமாயண நாடகம்..அரங்கேற்றிய மாணவர்களுக்கு ரூ1.2 லட்சம் அபராதம்! | 12 Lakh Fine For Students Who Staged Ramayana

அதில் பெண்ணிவாத கருத்துகளை முன்வைப்பதாக கூறி, ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தியுள்ளனர் என மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அயோத்தி கோயில்; தங்க தகடுகளில் மின்னும் ராமாயண கதை - தீவிர பக்தர் அர்ப்பணிப்பு!

அயோத்தி கோயில்; தங்க தகடுகளில் மின்னும் ராமாயண கதை - தீவிர பக்தர் அர்ப்பணிப்பு!

ரூ1.2 லட்சம் அபராதம்

மேலும், ஐ.ஐ.டி. (பி) பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த நாடகம் தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர், அதில் மாணவர்கள் தங்களுக்கு கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கடவுள் ராமரையும், ராமாயணத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டின.

கலை நிகழ்ச்சியில் ராமாயண நாடகம்..அரங்கேற்றிய மாணவர்களுக்கு ரூ1.2 லட்சம் அபராதம்! | 12 Lakh Fine For Students Who Staged Ramayana

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கல்லுரி சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து, நாடகத்தை அரங்கேற்றிய 4 மாணவர்களுக்கு தல தலா ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்து நிர்வாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்லுரி அவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஜிம்கானா விருதுகளை கொடுக்க தடை செய்துள்ளது. அதுமட்டுமின்றி உடன் நிறுத்த 4 ஜூனியர் மாணவர்களுக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதி வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.