வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்!
20 கோடி தங்க நகைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அடித்துச் செல்லப்பட்ட தங்கம்
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே, அங்குள்ள வுக்கி கவுண்டியில் உள்ள ஒரு நகைக்கடைக்குள் இரவு முழுக்க ஊழியர்கள் நகைகளை பாதுகாத்துள்ளனர்.
இருப்பினும் வெள்ள நீர் திடீரென அடித்து வந்ததில் கடையில் இருந்தத தங்கம், வெள்ளி நகைகள் அடித்துச் செல்லப்பட்டது. உடனே கடை உரிமையாளர் தனது ஊழியர்களை விட்டு தேடி எடுத்து வருமாறு கூறியிருக்கிறார்.
இந்த தகவல் பரவிய நிலையில் அங்குள்ள மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தங்கம், வெள்ளி நகைகள் மட்டுமல்லாது, வைரம் மற்றும் மரகத கற்கள் பதித்த மோதிரங்கள், நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், பதக்கங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் உட்பட பல பொருட்கள் காணாமல் போயுள்ளன.
உரிமையாளர் எச்சரிக்கை
மேலும், புதிய கையிருப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு ரொக்கம் இருந்த கடையின் பாதுகாப்புப் பெட்டகமும் காணாமல் போனது. நிலவரப்படி, அடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு 10 மில்லியன் யுவானுக்கு (சுமார் ரூபாய் 12 கோடி) மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடை ஊழியர்கள் இரண்டு நாட்கள் அப்பகுதியில் தேடி சுமார் 1 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
தற்போது நகையை எடுத்துவிட்டு திருப்பி கொடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கடை உரிமையாளர் எச்சரித்துள்ளார்.