வெளியானது 11- ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் - 90 சதவீதம் பேர் தேர்ச்சி..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தேர்வர்களின் எண்ணிக்கை
இதில் 90 சதவீத மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது.
மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேர் பங்கேற்றனர்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது
இந்த +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த தேர்வு முடிவுகளின் தேர்ச்சி சதவீதம் 90.7 சதவீதமாக உள்ளது.வழக்கம் போல் மாணவிகள் 94.99 சதவீதம் பேரும் மாணவர்களில் 86.84 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களில் 83.27 சதவீதம் பேரும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.