சட்டவிரோத குடியேற்றம்.. 2ம் கட்டமாக நாடு கடத்தப்பட்டும் இந்தியர்கள் - நிலை என்ன?
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 பேர் 2ம் கட்டமாக நாடு கடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை நாடு கடத்தி வருகிறார். அதில் இந்தியாவும் அடங்கும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள 104 இந்தியர்களைத் திருப்பி அனுப்பினர்.
அதில் பஞ்சாப், ஹரியானா,குஜராத்,மகாராஷ்டிரா ,உத்தரப்பிரதேசம்,சண்டிகர் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதில். மேலும் கைவிலங்கு, கால்களில் சங்கிலி விலங்கு அணிந்து அழைத்து வரப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2ம் கட்டம்
இந்த நிலையில், 2ம் கட்டமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர். இதில், பஞ்சாபைச் சேர்ந்த 67 நபர்கள், ஹரியானாவைச் சேர்ந்த 33 பேர், குஜராத்தைச் சேர்ந்த 8 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர், கோவா, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்,
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2பேர் மற்றும் இமாச்சல் பிரதேசம் , ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தலா 2 உள்ளிட்ட 119 பேர் உள்ளனர். மேலும் விமானம் நாளை (15ம் தேதி) இரவு 10 மணிக்குப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.