நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; 116 பேர் பலி - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

China Earthquake Death
By Sumathi Dec 19, 2023 07:47 AM GMT
Report

நிலநடுக்கத்தில் 116 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம்

சீனா, கன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லான்ஜோவிலிருந்து தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளப் பகுதிகளிலும், வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜியானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

china-earthquake

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. பல கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஹைடாங் நகரில் மட்டும் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

நிலநடுக்கத்தில் தன் உடலால் மகனை மூடி காப்பாற்றிய தந்தை - மண்ணோடு புதைந்த வீடியோ வைரல்...!

நிலநடுக்கத்தில் தன் உடலால் மகனை மூடி காப்பாற்றிய தந்தை - மண்ணோடு புதைந்த வீடியோ வைரல்...!

116 பேர் பலி

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 116 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பல கட்டடங்கள் இடிந்து கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்" எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.