ஒரு தேவாலயத்தையே அலேக்காக 5கிமீ நகர்த்திய மக்கள் - பின்னணி என்ன?

Sweden Viral Photos
By Sumathi Aug 21, 2025 08:42 AM GMT
Report

தேவாலயம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரும்புத் தாதுக்கள் 

ஸ்வீடனின் வடக்கே கிருனா நகர் உள்ளது. இந்த நகருக்கு அருகே பூமிக்கு அடியில், 4,000 அடி ஆழத்தில் மிகப்பெரிய அளவில் இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

sweden

 1890களில் இருந்து, அரசுக்குச் சொந்தமான நிறுவனம் இந்தப் பகுதியிலிருந்து சுமார் 2 பில்லியன் டன் தாதுவை பிரித்தெடுத்துள்ளது. இதையடுத்து, இந்த நகரில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை, அருகே புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றும் பணி நடைபெற்றது.

இங்கு வசித்த 18,000 மக்களும் புதிய நகருக்குப் பயணமாகியுள்ளனர். இந்நிலையில், 1912ஆம் ஆண்டு கட்டப்பட்ட 672 டன் எடையுள்ள பழைய ஸ்வீடிஷ் லூத்தரன் தேவாலயம் அப்படியே இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன் அடித்தளத்திலிருந்து தூக்கி, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிரெய்லரில் வைக்கப்பட்டுள்ளது.

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்..

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்..

நவீன தொழில்நுட்பம்

ரிமோட் கண்ட்ரோல் பிளாட்பெட் டிரெய்லர்களில் ஐந்து கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்படும் இந்த நடவடிக்கையானது, மணிக்கு அரை கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்றுள்ளது.

ஒரு தேவாலயத்தையே அலேக்காக 5கிமீ நகர்த்திய மக்கள் - பின்னணி என்ன? | 113 Year Old Church Moved 5 Km In Sweden Viral

தேவாலயத்தை நகர்த்துவதற்கு மட்டும் 500 மில்லியன் குரோனர் ($52 மில்லியன்) செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரெய்லர்கள் சீராக நகரும் வகையில் சாலைகள் ஒன்பது மீட்டரிலிருந்து 24 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு சமதளமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியே கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தேவாலயம் கொண்டு செல்லப்பட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.