அதிபர் புதினின் கழிவை சேகரித்த பாதுகாவலர்கள் - பின்னணி என்ன?
அதிபர் புதினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதின் உடல்நலம்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் புதினை அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஷாக் தகவல்
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்காக அலாஸ்கா வந்த ரஷ்ய அதிபர் புதினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மலத்தைப் பரிசோதனை செய்யலாம் என்ற அச்சத்தில், இந்த நடைமுறையை அதிபர் புதினின் சிறப்பு பாதுகாப்புப் படை 2017-ஆம் ஆண்டில் இருந்தே பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது.