ரொம்ப நாள் வாழணுமா?.. இதெல்லாம் பண்ணுங்க - ரகசியம் சொன்ன 111 வயது முதியவர்!

United Kingdom World
By Vinothini Sep 02, 2023 09:36 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

முதியவர் ஒருவர் அதிக நாட்கள் வாழ்வதற்கான ரகசியத்தை கூறியுள்ளார்.

111 வயது முதியவர்

யூகே-வின் அதிக வயதான மனிதர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான ஜான் டின்னிஸ்வுட் 1912-ம் ஆண்டு யூகே-வில் உள்ள லிவர்பூல் என்ற இடத்தில் பிறந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தன்னுடைய 111வது பிறந்த நாளை கொண்டாடினார்.

111-aged-old-man-shared-about-his-experience

இவருக்கு அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலியாவிடமிருந்தும் இந்த முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இவர் சவுத் போர்ட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

ரகசியம் பகிர்ந்த முதியவர்

இந்நிலையில், அவர் பேசுகையில், "110 வயது வரை வாழ்வதில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. கடந்த 10 முதல் 20 வருடங்களாகவே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை. மேலும், வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அளவாக இருக்க வேண்டும் படிப்பதும், உணவு உட்கொள்வதும், வாக்கிங் செல்வதும் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எதையும் செய்யக்கூடாது.

111-aged-old-man-shared-about-his-experience

அதே சமயத்தில் தேவையான அளவு உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.