6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 11 வயது சிறுவன் - டியூசனில் நடந்த கொடூரம்!

Sexual harassment Uttar Pradesh
By Swetha Apr 09, 2024 10:55 AM GMT
Report

4-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன், 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்த கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் அமைந்துள்ள ஓரு கிராமத்தில் டியூசன் சென்ற 6 வயது சிறுமியை 11 வயது சிறுவன் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 11 வயது சிறுவன் - டியூசனில் நடந்த கொடூரம்! | 11 Year Old Boy Arrested For Raping 6 Year Girl

அதில், "டியூசன் சென்ற எனது மகளை சிறுவன் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இரவு 7.30 மணியளவில் அவள் வீட்டை அடைந்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது அவள் நடந்த விஷயங்களைக் கூறினாள்.

குற்றம் செய்த சிறுவனை அவளுக்குத் தெரியும். அவன் குறித்த விவரத்தையும் அவர் கூறியுள்ளார். இதன் பின் எங்கள் மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளோம்" என குறிப்பிட்டிருந்தது.

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை ...விஜய் அலுவலக கணக்காளர் அதிரடி கைது..!

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை ...விஜய் அலுவலக கணக்காளர் அதிரடி கைது..!

 பாலியல் வன்கொடுமை

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவனை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அச்சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 11 வயது சிறுவன் - டியூசனில் நடந்த கொடூரம்! | 11 Year Old Boy Arrested For Raping 6 Year Girl

மேலும், குற்றவாளியான சிறுவனும், பாதிக்கப்பட்ட சிறுமியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.