பள்ளிக்கு மொபைல் கொண்டு வரகூடாது.. கண்டித்த ஆசிரியர் - மாணவன் வெறிச்செயல்!
கண்டித்த ஆசிரியரை மாணவன் ஒருவர் கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல்
உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நவாயுக் இன்டர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திர பிரசாத். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,
அங்கு பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடந்த சில நாட்களாக செல்போன் கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளனர். அதனை பார்த்த ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் மாணவர்களை கண்டித்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளார்.
வெறிச்செயல்
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியர் வகுப்புக்கு வந்தபோது அவரை கத்தியால் குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியர் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.