பஞ்சாப் வாயுக்கசிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - நீலமாக மாறிய உடல்கள்
பஞ்சாபில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 பரிதாப பலி
பஞ்சாப், லூதியானாவில் உள்ள கியாஸ்புரா பகுதியில் இருந்த தொழிற்சாலை ஒன்றில் வெளியான வாயுவினால் அந்த பகுதி மக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 5 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள் மற்றும் இதில் 10 மற்றும் 13 வயதுள்ள இரண்டு சிறுவர்களும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 4 பேர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பேரிடர் மீட்புப் படயினர் விரைவு
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தீ அணைப்புப் படையினர், காவல்துறையினர், 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை விரைந்து வந்தனர்.

வாயு கசிவினால் அங்கிருந்த மக்கள் உடனடியாக பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், வாயுக் கசிவுக்காண காரணம் தெரியவில்லை என்றும், எத்தகைய வாயு வெளியேறியது என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று லூதியானா காவல் ஆணையர் மன்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளாந்த வருத்தம் தெரிவித்ததோடு, சாத்தியமான அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.