நான் 10ம் வகுப்பு fail ஆக.. இந்த கடவுள்தான் காரணம் - கோவிலில் மாணவன் செய்த காரியம்!
கோவிலில் மாணவன் ஒருவர் சாமி சிலையை உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன்
கர்நாடக தலைநகர் பெங்களூரின் கிழக்கு பகுதியில் திப்பசந்திரா கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அந்த கோவிலில் இருந்த புவனேஸ்வரி கடவுள் சிலையை உடைத்தாக
சிறுவன் மீது போலீசார் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பரீட்சையில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் அடைந்த சிறுவன் விரக்தியில் இருந்துள்ளான்,
தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய சிறுவன் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புவனேஸ்வரி சிலையைக் கீழே தள்ளி உடைத்துள்ளான். சிலை உடைந்து கிடப்பதை கோவில் பூசாரி சில மணி நேரங்கள் கழித்து கவனித்துள்ளார்.
கோவிலில்
அதன் பிறகு போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சிறுவன் ஒருவன் சிலையை உடைத்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து மஃப்டி உடையில் சென்ற இரண்டு போலீசார் சிறுவனை கஸ்டடியில் எடுத்து சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வில் ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம் என்று மாணவன் சாமி சிலையை உடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.