திடுடிய சிலைகளை திருப்பி கொடுத்த திருடர்கள்.. கடவுளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம்

Uttar Pradesh
By Petchi Avudaiappan May 17, 2022 07:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேசத்தில் திருடிய கோயில் சிலைகளை திருடர்கள் திரும்ப ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தரகூட் பகுதியில் உள்ள 300 வருட பழமை வாய்ந்த விஷ்ணு கோஇலில் 16 அஷ்டதாது சிலைகள் கடந்த மே 9 ஆம் தேதி திருடப்பட்டது. இதன் மதிப்பு பல கோடிகளாகும் என சொல்லப்படும் நிலையில்,  இந்த திருட்டு தொடர்பாக கோவில் பூசாரி புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பூசாரியின் வீட்டின் அருகே சாக்கு பை ஒன்று மர்மான முறையில் கிடந்துள்ளது. அதில், தொலைந்து போன 16 சிலைகளில் 14 சிலைகள் இருந்துள்ளன. அத்துடன் அதில் ஒரு துண்டு சீட்டும் இருந்துள்ளது.

அதில் கோவிலில் சாமி சிலையை திருடிய பின்னர் தங்களுக்கு மோசமான கனவுகள் வந்ததாகவும். இதனால் சிலைகளை  திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாங்கள் செய்த தவறை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி சோதனை செய்து கோவிலில் பத்திரமாக வைத்துள்ளனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும் கிடைத்த தடயங்கள் மூலம் திருடர்கள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.