ரப்பர் வாங்கி தராததால் ஆத்திரம்...இறுதியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!
ரப்பர் வாங்கி தராததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
ரப்பர் கேட்ட மனைவி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநீலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதிக்கு 14 வயதில் மனிஷா என்கிற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மனிஷா அவரது பெற்றோரிடம் ரப்பர் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவரது தாயார் நாளை வாங்கித் தருகிறேன் என சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பள்ளி மாணவி மனிஷாவிற்கும் அவரது தாயாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேர்ந்த விபரீதம்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மணிஷா தன் கையில் இருந்த பென்சிலை எடுத்து அவரது தாய் பரிமளா மீது குத்தியுள்ளார். அப்போது சிகிச்சைக்காக பரிமளா உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
அந்த நேரத்தில் மனிஷா அவரது அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாய் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அங்கு மின்விசிறியில் மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.