பொதுத்தேர்வில் தோல்வி - தமிழகத்தில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை ; 28 பேர் தற்கொலை முயற்சி
10-12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு நேற்று (திங்கட்கிழமை) வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.
இதில் 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்தடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் , 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இடம் பெற்றது.
மாணவர்கள் தற்கொலை
இந்நிலையில், தமிழ்நாட்டில் 10ம், 12ம் தேர்வில் தோல்வியடைந்த 11 மாணவர்கள் நேற்று ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளது.