10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இதோ..அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Swetha Oct 14, 2024 06:35 AM GMT
Report

நடப்பு கல்வி ஆண்டின் பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

பொதுத் தேர்வு 

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இதோ..அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! | 10Th 11Th 12Th Std Public Exam Schedule Released
அதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

  • 28 மார்ச் 2025 ஆம் தேதி தமிழ் மற்றும் இதரமொழிப் பாடங்கள்
  • 2 ஏப்ரல் 2025 ஆங்கிலம்
  • 4 ஏப்ரல் 2025 விருப்ப மொழித் தேர்வு
  • 7 ஏப்ரல் 2025 கணிதம்
  • 11 ஏப்ரல் 2025 அறிவியல்
  • 15 ஏப்ரல் 2025 சமூக அறிவியல்

என ஒவ்வோரு தேர்வும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும். மே 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

ஆளுநர் அரசு பள்ளிகள் குறித்து பேசுவதை வரவேற்கிறேன் -அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆளுநர் அரசு பள்ளிகள் குறித்து பேசுவதை வரவேற்கிறேன் -அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அறிவிப்பு

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும். அதன் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும்.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இதோ..அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! | 10Th 11Th 12Th Std Public Exam Schedule Released

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும். மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.