சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Tamil nadu Accident Death
By Sumathi Sep 30, 2024 04:33 AM GMT
Report

நடப்பாண்டு சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் 5% குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும், போக்குவரத்து காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளால் 570 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்! | 10536 People Died In Road Accidents Report

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2024 ஆம் ஆண்டில் 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 10,536 உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 10,589 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 11,106 பேர் உயிரிழந்தனர். சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவது குறித்து, போக்குவரத்து காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பின் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 523 சாலை விபத்து வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளது.

60வது திருமண நாள்; அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

60வது திருமண நாள்; அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

ஷாக் ரிப்போர்ட்

அதாவது 5% வழக்குகள் குறைந்துள்ளது. 5% உயிரிழப்புகள் என்பது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 570 உயிர்கள் சாலை விபத்துக்கள் பலியாவது தடுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் சில முக்கிய நடவடிக்கைகள் இன்றியமையாதவை.

சாலை விபத்தில் 10,536 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்! | 10536 People Died In Road Accidents Report

குறிப்பாக ஜூலை 2024 வரை அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை தாண்டி செல்பவர்கள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிக சுமை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு வாகனங்கள், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் 6,66,721 வழக்குகள் பதிவாகியுள்ளன.