105 வயதில் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற மூதாட்டி..!

Gujarat India
By Thahir Jun 22, 2022 12:27 AM GMT
Report

105 வயது மூதாட்டி ஒருவர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்று பதக்கமும்,சுழற்கோப்பையையும் வென்றார்.

100 மீட்டர் ஓட்டபந்தயம்

குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டார்.

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த அச்சமும் இல்லாமல் தனிநபராக கலந்து கொண்டார் ராம்பாய். போட்டி தொடங்கியதும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் எட்டி சாதனை படைத்துள்ளார்.

105 வயதில் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற மூதாட்டி..! | 105 Age Grandmother Won Medal

அதுவும் இந்த 105 வயதில் என்பதுதான் புதிய சாதனை. அதோடு மட்டுமல்லாமல் 200 மீட்டர் ஓட்டத்திலும் பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார். பின்னர் அவருக்கு பதக்கம், சுழற்கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இளமையின் ரகசியம் 

அது குறித்து பேசிய மூதாட்டி ராம்பாய், எனக்கு இது ஒரு பெரிய உணர்வைத் தருகிறது. மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

105 வயதில் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற மூதாட்டி..! | 105 Age Grandmother Won Medal

இந்தப் பந்தயத்தின் நட்சத்திர மூதாட்டி வீராங்கனையான இவரை மூதாட்டி உசைன் போல்ட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

மேலும், 105 வயதிலும் தன் இளமையின் ரகசியம் பற்றி ராம்பாய் கூறும்போது, நாளொன்றுக்கு 250 கிராம் நெய், 500 கிராம் தயிர், அரைலிட்டர் சுத்தமான பால் நாளொன்றுக்கு இருமுரை இவரது உணவு.

தான் அதிகமாக அரிசி சாதம் எடுத்துக் கொள்வதில்லை என்றார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற பெண் - வைரலாகும் வீடியோ..!