மனதின் குரல்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், இளையராஜா உள்பட 200 பிரபலங்களுக்கு அழைப்பு
பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகிறது.
மன் கி பாத்
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகியுள்ளது. அதில் பெரும்பாலும், தமிழ்நாடு குறித்தே பேசியுள்ளார்.

இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் ஒலிப்பரப்பாகவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐநாவில் ஒலிபரப்பு
அதன்படி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க ரஜினிகாந்த், இளையராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ஆளுநர் மாளிகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் மான் கி பாத்தின் 100 ஆவது தொகுப்பை விவரிக்கும் வகையில் சிறப்பு காட்சிகளுடன் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 100 ஆவது தொகுப்பை சிறப்பிக்கும் வகையில், 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகம், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் போன்ற இடங்களிலும் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.