முதல்ல தடுப்பூசி கிடைக்கட்டும் பிறகு ரேடியோவில் பேசலாம் .. மோடியினை விமர்சிக்கும் ராகுல் காந்தி

modi rahulgandhi MannKiBaat
By Irumporai Jun 27, 2021 01:30 PM GMT
Report

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு 'மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தான்பதவியேற்றதிலிருந்து  மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆல் இந்தியா ரேடியோ மூலமாக மனதின் குரல் (மன்கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்

இன்று  இந்த மாதத்திற்கான மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசினார்.இது அவரின் 78-வது  பகுதியாகும்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை விமர்சித்து ட்விட் செய்துள்ளார்

அதில்,கொரோனா தடுப்பூசி போட்டவர்களின்  குறித்த ஒரு வரைபடத்தை பதிவிட்டுள்ள ராகுல், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள்.பிறகு 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.