ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லையா? - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வருவாய் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2023 செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் அறிவிப்பு
இந்த திட்டத்தின் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 32 லட்சம் பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த உரிமை தொகை பெற அரசு வேலையில் இருக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இதற்கு விண்ணப்பித்த பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், "ரேஷன் கார்டு உள்ள அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்" என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.