கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் மாற்றம் - முதலமைச்சர் அறிவிப்பு..!
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சேர்ப்பு.
கலைஞர் உரிமைத் தொகை திட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு வரும் செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் இனி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் சரியான குடும்ப தலைவிகளை சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.