ரேசன் அட்டை இருந்தால் போதும் மாதம் ரூ.1000 - தமிழக அரசின் அதிரடி ப்ளான்
ஜுன் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.
திமுக தனது திமுக வாக்குறுதியில் மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதை தொடர்ந்த 2021ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்று மகளிர் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகியும் இதுவரை திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர்.
எப்போது கிடைக்கும்?
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து வருகிற ஜுன் மாதம் 3 ஆம் தேதி முதல் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.