மழை - வெள்ளம்: ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில் - சிக்கி தவிக்கும் 1000 பயணிகள்!
மழை - வெள்ள பாதிப்பால் 4 மாவட்டங்களின் - திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி பல பகுதிகள் தனி தீவாக மாறியுள்ளன.
மழை - வெள்ளம்
கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
உடனடியாக மீட்புப்பணிகளை முடிகிவிட்டுள்ள அரசு மக்களை மீட்பதிலும், அவர்களுக்கான உதவிகளை செய்வதிலும் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகின்றது. இதற்கிடையில், திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ், நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தவிக்கும் பயணிகள்
1000-க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசும் அவர்களுக்கு உதவிட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்தான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இன்று மீட்புப்பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூறி,
ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்ட ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.