இனி 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? உண்மை இதுதான்..மின் வாரியம் விளக்கம்!
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவலுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இலவச மின்சாரம்
தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புக்கு வழங்கப்படும் 100யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம், ஒரே வளாகத்தில் ஒருவரின் பெயரில் இருக்கும் பல இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கும் நிலை இருப்பதால்,
ஒரு வளாகத்தில் ஒருவரின் பெயரில், இருக்கும் பல இணைப்புகளை ஒன்றாக இணைத்து, ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின் வாரியம்
இதற்காக சென்னையில் ஒரு வளாகத்தில் ஒருவரின் பெயரில் இருக்கும் பல இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் மூலம், ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழக்க முடிவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று கணக்கெடுப்புகளை நடத்தி ஒருவரின் பெயரில் உள்ள பல இணைப்புகளை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பரவி வரும் வதந்தி குறித்து பதிவிட்ட மின்சார வாரியம், 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல.
இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற தகவல்களுக்கு எங்களின் அதிகாரப்பூர்வ தங்களை பார்க்கவும் என்று விளக்கம் அளித்துள்ளது.