1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டனுமா? அனுமதி கட்டணம் உயர்வு - பொதுமக்கள் ஷாக்!

Chennai
By Sumathi Nov 03, 2023 06:19 AM GMT
Report

1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம்100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனுமதி கட்டணம்

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் நடந்தது. அதில், 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் கட்டிட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

வீடு கட்ட அனுமதி கட்டணம்

அதன்படி, 1,000 சதுர அடிக்கு மேல் வீடுகளுக்கான கட்டிடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100% வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் உயர்வு

மேலும், 100 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை பொறுத்தவரை, இந்த தொகை தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

வணிக மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப் பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்படியே கப்பல் வடிவில் கனவு இல்லம் - மிரள வைக்கும் விவசாயின் முயற்சி!

அப்படியே கப்பல் வடிவில் கனவு இல்லம் - மிரள வைக்கும் விவசாயின் முயற்சி!

கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்பட உள்ளது.