திருமணத்தில் விருந்து சாப்பிட்ட 100 பேர் திடீரென மயக்கம் - கேரளாவில் பரபரப்பு!

Kerala
By Vinothini May 20, 2023 06:49 AM GMT
Report

திருமண நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருந்து

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாரஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் எடப்பால் அருகே காலடி பகுதியை சார்ந்த இளைஞனுக்கும் துருவாணம் பகுதியில் இன்று திருமணம் நடைபெற்றது.

100-people-fainted-after-having-marriage-food

இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில் அளிக்கப்பட்ட விருந்தில் உணவருந்திய சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து உணவருந்திய பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதனால் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மயக்கம்

இந்நிலையில், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர், பின்னர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

100-people-fainted-after-having-marriage-food

யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அங்கு வழங்கப்பட்ட உணவில் விஷத்தன்மை இருந்ததா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு வகைகளிலிருந்து மாதிரி சேமித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.