புது பஸ் வந்தாச்சு; மஞ்சள் நிறத்தில் பிஎஸ் 6 ரக பேருந்துகள் - தொடங்கி வைத்த முதலமைச்சர்!
BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
BS6 ரக பேருந்துகள்
1666 BS6 ரக பேருந்துகளை ரூபாய் 634.99 கோடி மதிப்பில் காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்த முதல்வர்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேருந்துகளை முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு மஞ்சள் நிறத்தில் புதிய பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும். கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும்,
மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.