சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தாறேன் - சீமான் தடாலடி!
சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சனாதனம்
சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.
தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி சன்மானம் என அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சீமான் ஆவேசம்
அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே? இந்தியா என்ற பெயரை எடுத்து விட்டு, வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா? ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர முடியவில்லை.
இன்று டெல்டாவில் பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும் அவ்வளவுதான். மக்களவைத் தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள். நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன். உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன்.
தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல, கசாப்பு கடைக்காரர்.
தம்பி உதயநிதி ஒரு கருத்தை முன் வைத்தால் அதனை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தலையை வெட்டுவேன் கையை வெட்டுவேன் என்பதெல்லாம் சரியான பேச்சா? எனக் கேட்டுள்ளார்.