10 வயது சிறுமியை மது, புகை பிடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்கள்...அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Tamil nadu Child Abuse Crime
By Sumathi Jul 23, 2022 06:50 AM GMT
Report

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பூப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது மகள் ஜோதி (10). கடந்த மாதம் சிறுமி மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது.

10 வயது சிறுமியை மது, புகை பிடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்கள்...அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ! | 10 Years Old Child Compal To Smoke And Drink

இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இளைஞர்கள் வற்புறுத்தல்

விசாரணையில், சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி குடிக்க கொடுத்ததாகவும், பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

10 வயது சிறுமியை மது, புகை பிடிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்கள்...அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ! | 10 Years Old Child Compal To Smoke And Drink

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து,

வலைவீச்சு

பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த, சங்கையா (22) குமார் (21) ரமேஷ் (22) சிவராஜ் (27) ருத்ரப்பா (26) அழகப்பன் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களோடு இருந்து தலைமறைவான சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.