10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பெண்ணுறுப்பில் கம்பியை வைத்து..உச்சகட்ட கொடூரம்!

Sexual harassment Crime
By Vidhya Senthil Dec 20, 2024 05:36 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

ஜார்கண்ட் மாநில 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் 

ஜார்கண்ட் மாநிலம், பருச் மாவட்டத்தின் தொழிற்துறை பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகே 36 வயதான விஜய் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார்.

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது விஜய் பஸ்வான் கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத புதருக்குள் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், சிறுமியின் பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை வைத்துத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் பலத்த காயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.இதனைக் கண்ட விஜய் பஸ்வான் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.

கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை -விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை -விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

மேலும் வலியால் துடித்து அழுதுக் கொண்டிருந்த சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அவரது தாய் அந்த கோரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

 10 வயது சிறுமி

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் , சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விஜய் பஸ்வான் என்பது தெரியவந்தது.

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

மேலும் , சிறுமியின் தந்தையும் விஜய் பஸ்வானும் ஒரே தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததுள்ளனர்.இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விஜய் பகவானைச் சிறையில் அடைத்தனர்.